பிரியமாய் இருந்தவனே..!
பிரிந்து ஏன் சென்றாய்..?
புரியத்தான் முடியல்லையே
புன்னாய்ப் போன மனசாலே....

உயிரே.. என்று உறவாடி
உயிரயே இப்போ உறிஞ்சிறையே..
காதல் நோய் பிடித்த பின்பு
எங்கே போய் மருந்தேடுப்பேன்..?

காயப்படுத்தி சென்று விட்டாய்
கானல் நீர்தான் வடிகிறதே
சிந்தனையில் வாடுகிறேன்
சிறைச்சாலைக் கைதியாக..

சீதனமாய் என்ன வேண்டும்
சிறையெடுக்க வந்து விடு
சீர்வரிசை செய்து செய்து
சீரழிந்தான் எங்கப்பன்.

மதில் மேல் பூனையாக
மாரடிக்குது உன் மனசி
தூண்டிலில் சிக்கிய மீனாக
துடிக்கிறது என் உயிரு...


-பாசமற்றுப் போகின்றாய்..-


வீறு கொண்டு செல்கின்றாய்
விசக் கிருமியாய்.......
ஈட்டி கொண்டு இடித்து விட்டு
என் இதயத்தில்.....
பாசமலர் பெற்ற பெண்ணா..?
பாசமற்றுப் போகின்றாய்.
நேசமலர் பெற்ற பெண்ணா....?
நெஞ்சைக் கிழித்து பார்க்கின்றாய்.........
கனவில் மணம் முடித்து
கண்ணீரால் வாழ்த்துகின்றேன்.
கண்மணியே....!நீ இன்று
கண்கலங்கச் செய்வதென்ன.....
கசாப்புக் கடைக்காரனும்
கத்தியெறிந்து வெட்ட மாட்டான்.
காதலித்த நீ இன்று
கத்தியின்றி கிழித்திட்டையே...!
நெரிஞ்சி முள்ளுக் குத்தியதா..?
என் நெஞ்சினிலே...
நெருப்பாய் எரிகின்றதே....
என் கண்ணுக்குள்ளே...!
பெண்ணே...!
இறந்தும் துடிக்கும் என் இதயம்
மீண்டும் வருமா எனக்கோர் உதயம்.

-நினைத்த மனம் மறக்கவில்லை-


பிரிவின் செய்தி கேட்டு 
கிழிந்து போன நெஞ்சத்துள் 
எரிகின்றது நெருப்பு, 
அவள் மறந்து போன தவிப்பால்... 

சொல்லியும் கேட்காமல் 
இருள்கிறது விழிகள் 
மழையே இல்லாமல் 
நனைகிறது இமைகள். 

இதயத்தில் உள்ள பள்ளம் -அவள் 
எழுந்து சென்றதைச் சொல்லும் 
அடிக்கடி உள்ளம் 
சிரித்துக் கொண்டே கொல்லும்.  

தனிமையில் அவள் நினைவு 
தலையணை நனைக்க 
உடைபட்ட மனம் 
சிறையிருக்க துடிக்கின்றது. 

எதிர்காலம் கேள்விக் குறியாய் 
நிகழ்காலம் தடுமாற 
இறந்தகாலம் மட்டும் 
மீண்டும் மீண்டும் உயிர்க்கிறது உணர்புகளால் . 

நினைத்த மனம் 
மறக்காமல் தவிக்கையில் 
மணந்த மனம் ஏனோ 
மரத்து நிக்கின்றது, 
மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டு.

- ஜீவன் வாடுது -

உன் பாதம் பட்ட எறும்பு கூட
ஆடிப்பாடி ஓடுதடி,.
உன் பார்வை பட்ட என் முகத்தில்
தாடி நீண்டு வளருதடி.

தாலி கட்ட நினைக்கையிலே
வேலி தாண்டி சென்றவளே......!
கரம் பிடிக்க வருகையிலே
என் கையுதறிப் போனாயே......

நாம் போன பாதையிலே
நீ தொட்ட பூக்கலெல்லாம்
முகம் சுருண்டு தொங்குதடி,
தென்றல் வந்து தடவமுன்னே
உன்வரவைத் தேடுதடி.

மணம் முடித்து போன பின்பும்
என் மனம் மாற மறுக்குதடி,
உன் மறுஜென்மம் வேண்டி
என் ஜீவன் வாடுதடி.

-புரிந்து கொள் -

பெண்ணே...!
மார்போடு புத்தகம் மறைத்து செல்கையிலே,
மனதுக்குள் உள்ளேனென 
மாராப்பு போட்டேன் - நீ
மறைத்து செல்வது 
இன்னொருத்தனையெனத் தெரியாமலே...

பதுங்கிப் பதுங்கி போகையிலே
பாசமென நினைத்திருந்தேன்,
புதைகுழி வெட்டத்தான் - நீ
பூமி பார்த்து நடந்ததை உணராமல்,
விருப்பம் சொன்ன வேளை
நீ...
செருப்பால் அடிப்பேன் என்றபோதே...
செத்து விட்டேன் நான்.
செத்த பின்னும் அலைகின்றேன்
பித்து பிடித்து உன் பின்னால்.

பெண்ணே...!
புலம்புகின்றேன் நானொருத்தன்,
சுடுகாட்டில்
சூடுதாங்க முடியாது 
எழுந்து வந்த பிணமாக.

ஆவிகள் உலாவுதென்று
சொன்னார்கள் பெரியோர்கள்,
பொய்..............
ஆசைகள்தான் உலாவுகிறது,
புரிந்து கொள் - நீயும்.

-எங்கே சென்றாய்.? -


எப்போ தொலைந்தது தெரிய வில்லை.
யாரில் நுழைந்தது புரிய வில்லை.
திருடிச் சென்றவள் சொல்லவில்லை.
திருப்பி எதையும் கொடுக்கவில்லை.

நிரந்தரமில்லாத வானவில்லாய்
என் நிழலையும் திருடிச் சென்று விட்டாய்.
நிலைகுலைந்து நிற்கையிலும்
கனவில் எதற்கு கொல்கின்றாய்..?

இரண்டாய்ப் போன இதயத்துள்
இப்போதும் துடிக்கின்றாய்...
நின்று நின்று துடித்தும்
நிம்மதியைக் குலைக்கின்றாய்...

வாடகைக்கா காதலித்தாய் ..?
வாலிப நெஞ்சை நோகடித்தாய்..?
ஈழப் பெண்ணாய் நீயிருந்தும்
எதற்கு என்னை சாகடித்தாய்...?

கவிதையாக நீயிருந்தும்
என் கவிதையை எதற்கு ரசிக்கின்றாய்..?
காதல் விட்டுப் போன பின்பும்
எதற்கு கண்ணீர் வடிக்கின்றாய்..?

காரணம் சொல்லி பிரிந்திருந்தால்
கண்ணே உன்னை மறந்திருப்பேன்.
வேண்டாம் என்று சொல்லி விட்டாய்
வெந்து வெந்து துடிக்கின்றேன்.......
பித்துப் பிடித்து அலைகின்றேன்.
பிரியப் பட்டு வந்ததனால்,

பிரியமாய் இருந்தவளே..!
பிரிந்து எங்கே சென்றாயடி.....?