-எங்கே சென்றாய்.? -


எப்போ தொலைந்தது தெரிய வில்லை.
யாரில் நுழைந்தது புரிய வில்லை.
திருடிச் சென்றவள் சொல்லவில்லை.
திருப்பி எதையும் கொடுக்கவில்லை.

நிரந்தரமில்லாத வானவில்லாய்
என் நிழலையும் திருடிச் சென்று விட்டாய்.
நிலைகுலைந்து நிற்கையிலும்
கனவில் எதற்கு கொல்கின்றாய்..?

இரண்டாய்ப் போன இதயத்துள்
இப்போதும் துடிக்கின்றாய்...
நின்று நின்று துடித்தும்
நிம்மதியைக் குலைக்கின்றாய்...

வாடகைக்கா காதலித்தாய் ..?
வாலிப நெஞ்சை நோகடித்தாய்..?
ஈழப் பெண்ணாய் நீயிருந்தும்
எதற்கு என்னை சாகடித்தாய்...?

கவிதையாக நீயிருந்தும்
என் கவிதையை எதற்கு ரசிக்கின்றாய்..?
காதல் விட்டுப் போன பின்பும்
எதற்கு கண்ணீர் வடிக்கின்றாய்..?

காரணம் சொல்லி பிரிந்திருந்தால்
கண்ணே உன்னை மறந்திருப்பேன்.
வேண்டாம் என்று சொல்லி விட்டாய்
வெந்து வெந்து துடிக்கின்றேன்.......
பித்துப் பிடித்து அலைகின்றேன்.
பிரியப் பட்டு வந்ததனால்,

பிரியமாய் இருந்தவளே..!
பிரிந்து எங்கே சென்றாயடி.....?