-நினைத்த மனம் மறக்கவில்லை-


பிரிவின் செய்தி கேட்டு 
கிழிந்து போன நெஞ்சத்துள் 
எரிகின்றது நெருப்பு, 
அவள் மறந்து போன தவிப்பால்... 

சொல்லியும் கேட்காமல் 
இருள்கிறது விழிகள் 
மழையே இல்லாமல் 
நனைகிறது இமைகள். 

இதயத்தில் உள்ள பள்ளம் -அவள் 
எழுந்து சென்றதைச் சொல்லும் 
அடிக்கடி உள்ளம் 
சிரித்துக் கொண்டே கொல்லும்.  

தனிமையில் அவள் நினைவு 
தலையணை நனைக்க 
உடைபட்ட மனம் 
சிறையிருக்க துடிக்கின்றது. 

எதிர்காலம் கேள்விக் குறியாய் 
நிகழ்காலம் தடுமாற 
இறந்தகாலம் மட்டும் 
மீண்டும் மீண்டும் உயிர்க்கிறது உணர்புகளால் . 

நினைத்த மனம் 
மறக்காமல் தவிக்கையில் 
மணந்த மனம் ஏனோ 
மரத்து நிக்கின்றது, 
மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டு.